News May 14, 2024

மதுரை சரக டிஐஜி மத்திய அரசு பணிக்கு மாற்றம்

image

மதுரை மாவட்ட காவல்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட காவல்துறையை உள்ளடக்கிய மதுரை சரக காவல்துறை துணைத்தலைவர் (டிஐஜி) ரம்யாபாரதி , மத்திய அரசு பணிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
டிஐஜி ரம்யாபாரதி,சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரையில் பொறுப்பேற்றார்.
இவரைவிமானப் பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

Similar News

News July 9, 2025

2 விரைவு ரயில்களின் பயண நேரம் மாற்றம்

image

மதுரை பிரிவில் பொறியியல் பணிகளுக்காக ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. ரயில் எண் 07192 (மதுரை – கச்சிகுடா) ஜூலை 9 அன்று இரவு 10:40 பதிலாக 12 மணிக்கு (80 நிமிடங்கள் தாமதம்) புறப்படும். ரயில் எண் 07696 (ராமேஸ்வரம் – சார்லப்பள்ளி) ஜூலை 11 அன்று மாலை 9:10 பதிலாக இரவு 19:00 மணிக்கு (9 மணி நேரம் தாமதம்) புறப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.

News July 9, 2025

மதுரையில் ஜான் பாண்டியன் சுற்றுப்பயணம்

image

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும் தலைவருமான ஜான்பாண்டியன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் மதுரை புறநகர் கே.புதுப்பட்டி பகுதியில் நேற்று பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார். மேலும் அந்த பகுதி மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

News July 8, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

மதுரை மாவட்டத்தில் இன்று (08.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!