News March 7, 2026
₹6,600, ₹7,500.. தமிழக அரசு அறிவிப்பு

ரேஷன்கடை ஊழியர்களுக்கு 15% அடிப்படை ஊதியம், 55% அகவிலைப்படி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் புதிதாக நியமிக்கப்படும் விற்பனையாளர்களுக்கு ₹7,500, கட்டுனர்களுக்கு <<19309935>>₹6,600 தொகுப்பூதியம்<<>> ஒரு வருடம் வழங்கப்படும். ஓராண்டுக்குப்பின், விற்பனையாளர்களுக்கு ₹39,600, கட்டுனர்களுக்கு ₹35,000 வரை காலமுறை ஊதியம் வழங்கப்படும். மேலும், 3% ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும்.
Similar News
News March 26, 2026
BREAKING: விஜய் அதிரடி முடிவு.. கமிஷனர் ஆபிஸ் விரைந்தார்

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து அரசியல் விமர்சகர் பொன்ராஜ் ஆபாசமாக பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விஜய் புகார் அளித்துள்ளார். மேலும், திமுகவின் அரவணைப்பில் இருப்பதாலேயே பொன்ராஜ் தொடர்ச்சியாக அநாகரிகமாக பேசி வருவதாகவும், புகாரில் விஜய் குறிப்பிட்டுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 26, 2026
ஜப்பானில் 6.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் யமடா டவுனில் இன்று 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வீடுகள், கட்டடங்களை விட்டு மக்கள் வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. கடந்த 2 நாள்களுக்கு முன்பு தான் ஷிமானே மாகாணத்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தால் மக்கள் பீதியில் உள்ளனர்.
News March 26, 2026
ரயிலில் மிடில் பெர்த் பயன்படுத்த புதிய விதிகள்

ரயில் பயணங்களில் மிடில் பெர்த் பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி – காலை 6 மணி வரை மட்டுமே தூங்குவதற்கு மிடில் பெர்த் பயன்படுத்தலாம். சக பணிகள் ஒப்புதல் தந்தால் தூங்கும் நேரத்தை நீட்டிக்கலாம். நோயாளிகள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி பெற்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் தூங்கலாம்.


