News March 7, 2026
BREAKING: விஜய் மனைவி அடுத்த பரபரப்பு

நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரி, விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். லண்டனில் வசித்து வருவதால், சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை. நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலம் விஜய் தரப்பு மிரட்டுவதாக புகார் தெரிவித்துள்ள அவர், விவாகரத்து வரை நீலாங்கரை வீட்டிலேயே வசிக்க அனுமதிக்க வேண்டும் என விஜய்க்கு உத்தரவிட கோரியுள்ளார்.
Similar News
News April 6, 2026
KKR Vs PBKS : போட்டி நடக்குமா?

இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ள KKR, PBKS அணிகள் இடையிலான போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, மழை காரணமாக இரு அணி வீரர்களும் ஈடன் கார்டன்ஸில் பயிற்சி மேற்கொள்ளவில்லை. ஆடுகளமும் தார்ப்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய தகவலின்படி, இரவு 8 மணிக்கு மேல் 90% மழைக்கு வாய்ப்புள்ளதாம். போட்டி ரத்தானால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
News April 6, 2026
EPS-ஐ பந்தயத்துக்கு அழைத்த துரைமுருகன்

தனது உடல்நலன், வயது மூப்பு குறித்த EPS-ன் பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். வேலூர் பிரசாரத்தில் பேசிய EPS, எழுந்து நடக்கவே முடியாத துரைமுருகனால் எப்படி தொகுதி முழுக்க சென்று மக்களின் குறைகளை கேட்க முடியும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள துரைமுருகன், வேண்டுமென்றால் EPS-ஐ என்னுடன் நடைபயிற்சி போட்டிக்கு வரச் சொல்லுங்கள் பார்க்கலாம் என கூறி அழைப்பு விடுத்துள்ளார்.
News April 6, 2026
தமிழகத்தில் 9 பேருக்கு தூக்கு தண்டனை.. பரபரப்பு தீர்ப்பு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து மதுரை கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. முதல் குற்றவாளியான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் சேர்த்து ₹15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கின் விசாரணை, 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி முத்துக்குமரன் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.


