News May 14, 2024
கிருஷ்ணகிரி கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூடம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் , நேற்று சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது.
Similar News
News July 10, 2025
6 லட்சம் மக்கள் கொண்டாடும் மாபெரும் திருவிழா

கிருஷ்ணகிரி “இந்தியாவின் மாம்பழத் தலைநகரம்” என்று அழைக்கப்படுகிறது. மாம்பழ உற்பத்தியில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3,00,000 டன்களுக்கும் அதிகமான மாம்பழங்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதும் இதன் தனிச் சிறப்பு. இந்த விழாவில் 6 இலட்சத்திற்கு மேற்ப்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். ஷேர்!
News July 9, 2025
இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜூலை. 09) இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News July 9, 2025
பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் சாப்பர்த்தி பஞ்சாயத்து மோரன அள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் காளிரத்தினத்திற்கு (ஜூலை 7) பள்ளி கல்வித்துறை அமைச்சர் சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. வட்டார கல்வி அலுவலர் சார்பில் நேற்று வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.