News March 7, 2026
இதுதான் உண்மையான ‘தங்க வாத்து’

சீனாவின் ஒரு கிராமத்தில் ‘தங்க முட்டையிடும் வாத்து’ கதை நிஜத்தில் நிகழ்ந்துள்ளது. இறைச்சிக்காக வீட்டில் வளர்த்த வாத்தை அறுத்தபோது, அதன் வயிற்றில் 10 கிராம் தங்கம் இருந்துள்ளது. இது இந்திய மதிப்பின்படி ₹1.65 லட்சம் ஆகும். தங்கம் இருந்ததாக வரலாற்றில் கூறப்படும் சென்ஷுய் ஆற்றின் கரையோரம் வாத்து மேய்ந்ததால் துகள்கள் வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Similar News
News April 5, 2026
விஜய் மனசுல பாஜக தான் இருக்கு: குஷ்பு

புதுச்சேரியில் தவெக வேட்பாளருக்கு பதில் பாஜக வேட்பாளருக்கு <<19565066>>விஜய் வாய் தவறி<<>> வாக்கு கேட்டார். இந்த வீடியோ SM-ல் வைரலான நிலையில் பலரும் அவரை டிரோல் செய்து வருகின்றனர். இந்நிலையில், யாருக்கு வாக்கு சேகரிக்கிறோம் என்று தெரியாமல் தங்கள் கட்சி வேட்பாளர் பெயரை அவர் சொல்லியுள்ளதாக குஷ்பு விமர்சித்துள்ளார். மேலும் விஜய் மனதில் பாஜகதான் இருக்கு; அது மட்டும் உறுதி என்றும் கூறியுள்ளார்.
News April 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. அறிவிப்பு வந்தது

புதுக்கோட்டை, நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை(ஏப்.6) அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இயங்காது. அதேநேரம், 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை நடைபெறவிருந்த முழு ஆண்டுத் தேர்வு வரும் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News April 5, 2026
பரிசாக வந்த வேல்.. ரிட்டன் கொடுத்த உதயநிதி

ராமநாதபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது, திமுக நிர்வாகிகள் பலர் உதயநிதிக்கு பரிசுப்பொருள்களை வழங்கினர். அதில் ஒருவர் உதயநிதிக்கு வேல் வழங்கியபோது, அதை வாங்கிய சில நொடிகளில் அவரிடமே திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால், மற்றொரு நிர்வாகி புத்தர் சிலையை வழங்கியதும், அதனை வாங்கி வைத்துக்கொண்டார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


