News May 14, 2024
பெரம்பலூர் விவசாயிகளின் கவனத்திற்கு

பெரம்பலூர் மாவட்டத்தில் விளைநிலங்களின் உயர் விளைச்சல் ரகங்களுக்கு தொடர்ந்து இரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்வளம் பாதிக்கப்படுகிறது. திரவ உயிர் உரங்கள் இடுவதன் மூலம் மண்ணின் வளத்தை நிலைநிறுத்தி நிலையான உணவு உற்பத்தியைப் பெற முடியும். விவசாயிகள் அதிக மகசூல் பெற திரவ உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என வேளாண்மை இணை இயக்குநர் கீதா தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 10, 2025
பெரம்பலூர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்டவை VAO-வின் முக்கிய வேலையாகும். இவற்றை சரியாக செய்யமால் VAO யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க
News July 10, 2025
குடும்ப அட்டைகள் சம்பந்தமான சிறப்பு முகாம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் பெரம்பலூர் வட்டம் அரணாரை, வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை, குன்னம் வட்டம் புது வேட்டைகுடி, ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் வரும் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெற உள்ளது. இந்த முகாமில் மக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 10, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கள் சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் (ஜூலை 12) பெரம்பலூர வட்டம் அரணாரை கிராமத்திலும் வேப்பந்தட்டை வட்டம் தழுதாழை கிராமத்திலும் குன்னம் வட்டம் புது வேட்டைகுடி கிராமத்திலும் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்திலும் வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது. முகாமில் மக்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தகவல்