News May 14, 2024
கேப்டனை மாற்றும் திட்டம் இல்லை

லக்னோ அணியில் தற்போதைக்கு கேப்டன்சியில் மாற்றம் இல்லை என அந்த அணியின் துணை பயிற்சியாளர் லான்ஸ் குளூஸ்னர் தெரிவித்துள்ளார். லக்னோ உரிமையாளரும், கே.எல்.ராகுலும் மைதானத்தில் பேசியதில் எவ்வித தவறும் இல்லை என்ற அவர், அதை ஆரோக்கியமான விவாதமாகவே பார்க்க வேண்டும் என்றார். ஹைதராபாத் அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு, லக்னோ அணி உரிமையாளர், கேப்டன் கே.எல்.ராகுலை கடிந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 21, 2026
திமுக கூட்டணியில் தொடர்வதா? CPM ஆலோசனை

அவசர மாநில செயற்குழு கூட்டத்தை இன்று காலை CPM நடத்துகிறது. இதில் திமுகவுடன் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீடு இழுபறி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொள்ளலாமா, அல்லது வேறு முடிவு எடுக்கலாமா என்றும் விவாதிக்கப்பட உள்ளதாம். திமுக 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன் வருவதால் CPM அதிருப்தியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
News March 21, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 21, பங்குனி 7 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்:7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.
News March 21, 2026
டெல்லியில் கருணாநிதி காத்திருக்கவில்லையா? அதிமுக

டெல்லியில் EPS முகாமிட்டதை விமர்சித்த CM ஸ்டாலினுக்கு, அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. 2011-ல் மகள்(கனிமொழி) திகாருக்கு சென்றுவிடுவார் என பதறிப்போய், டெல்லியில் கருணாநிதி தவமாய் காத்திருக்கவில்லையா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அறிவாலயத்தின் மேல் மாடியில் நடந்த ரெய்டுக்கு பயந்து, கீழ் மாடியில் காங்.,-க்கு 63 தருவதாக பேசியவர் தான் கருணாநிதி எனவும் அதிமுக கூறியுள்ளது.


