News March 6, 2026

அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

image

நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 4 மையங்களில் தெருநாய்களுக்கான இனப்பெருக்கக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சைகள் நடைபெறுவதாகவும். உள்ளாட்சிப் பணியாளர்கள் மூலம் பிடிக்கப்படும் நாய்களுக்கு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு, ஐந்து நாள் கண்காணிப்பிற்குப் பின் மீண்டும் அதே இடங்களில் விடப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், இரவு நேர காவல் ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களைத் தடுக்கவும் மற்றும் சட்ட ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அவசர நிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தங்களது பகுதி காவல் அதிகாரியை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

News March 12, 2026

நாமக்கல்: UPI பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நாமக்கல் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News March 12, 2026

நாமக்கல்: முட்டை விலையில் மாற்றம் இல்லை

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.35-ஆக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில், நாமக்கலில் இன்று (மார்ச்.12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை மாற்றம் இன்றி ரூ.4.35-ஆக நீடிக்கிறது. மேலும் ரமலான் நோன்பு, ஈஸ்டர் பண்டிகை காரணமாக முட்டையின் தேவை குறைந்துள்ளது.

error: Content is protected !!