News May 13, 2024
பிளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்ட குஜராத் அணி

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியது. 63ஆவது லீக் போட்டி, அகமதாபாத் மைதானத்தில் இன்று நடைபெற இருந்தது. ஆனால், அங்கு கனமழை பெய்ததால் போட்டி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இன்றைய லீக் போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், 2024 ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் ரேஸிலிருந்து குஜராத் அணி வெளியேறியதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.
Similar News
News September 10, 2025
இன்று மாலை 5 மணி வரை மட்டுமே.. மிஸ் செய்யாதீங்க

SC-ன் கட்டாய தகுதித் தேர்வு உத்தரவால், TET தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்.8 உடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்ததால், பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள்
News September 10, 2025
RECIPE: உடல் கொழுப்பை கரைக்கும் சிறுதானிய இட்லி!

இதய ஆரோக்கியம் மேம்பட, உடல் கொழுப்பு குறைய தினை இட்லி உதவும் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*தினையை அரிசியுடன் சேர்த்து நன்கு கழுவி, 2 மணிநேரம் ஊற வைக்கவும். *இவற்றுடன் உளுந்தம் பருப்பையும் வெந்தயத்தையும் சேர்த்து, இட்லி பதத்திற்கு மென்மையாக அரைக்கவும்.
*உப்பு சேர்த்து 6 மணிநேரம் வரை புளிக்க வைக்கவும். இந்த மாவை இட்லி தட்டுகளில் ஊற்றி எடுத்தால், சுட சுட சத்தான தினை இட்லி ரெடி. Share it.
News September 10, 2025
குல்காமில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்

ஜம்மு & காஷ்மீரின் குல்காமில், நேற்று ஆபரேஷன் குடரின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 லக்ஷர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பாக்.,ஐ சேர்ந்த ரஹ்மான், மற்றொருவர் காஷ்மீரின் தரம்தோராவை சேர்ந்த அமீர் அஹ்மத் தர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.