News May 13, 2024
மோடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மோடிக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஷாகின் அப்துல்லா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் விதிகளை மீறி, மத அடிப்படையில் மோடி பேசுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென கோரியிருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையமே சட்டத்துக்குட்பட்டு சுதந்திரமாக முடிவெடுக்க வேண்டுமென கூறி தள்ளுபடி செய்தது.
Similar News
News September 10, 2025
ராஜீவ் காந்தி பாணியில் விஜய்?

தேர்தல் பரப்புரையை தொடங்கும் விஜய்க்கு, ஆளுங்கட்சியால் பல முட்டுக்கட்டைகள் போடப்படுவதாக தவெக குற்றஞ்சாட்டுகிறது. பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் விஜய் தங்குவதற்குகூட அறைகள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பிரசாரம் மேற்கொள்ளும் தொகுதிகளில் உள்ள தொண்டர்களின் வீடுகளில் தங்க விஜய் திட்டமிட்டுள்ளாராம். 1980-களில் ராஜீவ் காந்தியும் இதையே செய்தார். இது விஜய்க்கு கைகொடுக்குமா? கமெண்ட் பண்னுங்க
News September 10, 2025
தேர்தல் வெற்றிக்கு மேஜிக் பண்ண போறோம்: பிரேமலதா

2026 தேர்தலில் தான் செய்யவுள்ள மேஜிக், கட்சியினர் அனைவரையும் வெற்றிபெறச் செய்யும் என பூத் கமிட்டி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா பேசியுள்ளார். கட்சியை நம்பி வந்த நிர்வாகிகளை அரசு பதவிகளில் கெத்தாக பார்க்கவேண்டும் என கூறிய அவர், பூத் கமிட்டியை முறையாக அமைக்கும் படியும் அறிவுறுத்தியிருக்கிறார். மேலும், ஜனவரியில் கடலூர் மாநாட்டில் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 10, 2025
இன்று மாலை 5 மணி வரை மட்டுமே.. மிஸ் செய்யாதீங்க

SC-ன் கட்டாய தகுதித் தேர்வு உத்தரவால், TET தேர்வுக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கடந்த செப்.8 உடன் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைய இருந்ததால், பலரும் ஒரே நேரத்தில் விண்ணப்பிக்க முயற்சிக்கும் போது சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனையடுத்து, நீட்டிக்கப்பட்ட கால அவகாசம், இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. உடனே விண்ணப்பியுங்கள்