News May 13, 2024
நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை

நியாயம் வெல்வதை உறுதி செய்வது அதிகாரிகள் கடமை என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோயில் விழாவுக்கு அனுமதியின்றி பேனர் வைத்த விவகாரத்தில் பரமக்குடியில் பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி 5 பேர் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைத்து அரசு அதிகாரிகளும் நியாயத்துக்காக பணியாற்ற வேண்டுமென அரசு எதிர்பார்ப்பதாகவும், அதை லட்சியமாக கொண்டு பணியாற்ற வேண்டுமென நீதிபதிகள் கூறினர்.
Similar News
News March 14, 2026
குமரி: கேஸ் குறித்து கலெக்டர் புகார் எண் அறிவிப்பு

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. இதுதொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மருத்துவமனை, குழந்தைகள் (ம) பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சிலிண்டர் அனுப்புவதில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்றார்.
News March 14, 2026
விஜய் எடுக்கப்போகும் முடிவு.. என்ன நடக்கும்?

அதிமுக கூட்டணிக்கு தவெக செல்லும் என்பதே இன்றைய ஹாட் டாபிக். ஒருவேளை விஜய் இதற்கு கிரீன் சிக்னல் கொடுத்தால், தொடக்கம் முதலே கொள்கை எதிரி என கூறிவந்த பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு சென்றுவிட்டார் என பேச்சு எழும். செல்லவில்லையென்றால், திமுக, அதிமுக இரு கூட்டணிகளுக்கும் வாக்கு வங்கியில் பாதிப்பு உண்டாகும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?
News March 14, 2026
வெள்ளி விலை இன்று கிலோவுக்கு ₹10,000 குறைந்தது!

தங்கத்தை போன்றே இன்று (மார்ச் 14) வெள்ளி விலையும் குறைந்துள்ளது. 1 கிராம் ₹10 குறைந்து ₹280-க்கும், 1 கிலோ வெள்ளி ₹10,000 குறைந்து ₹2.80 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவதால், வரும் நாள்களில் இந்திய சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


