News May 13, 2024

Prank செய்ததால் மண வாழ்க்கையில் பிரச்னை

image

தனுஷ், ஆன்ட்ரியா மற்றும் தனது கணவர் கார்த்திக் குமார் இணைந்து ‘Prank’ செய்ததால் தான், விவகாரத்து பெற்றதாக பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில், சுசித்ராவின் X தளத்தில் இருந்து, பல சர்ச்சையான கருத்துகள் வெளியாகி தமிழ் சினிமா வட்டாரத்தை கலக்கத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து விளக்கமளித்த அவர், அதுபோன்று நடந்ததற்கு தனது கணவர் தான் எனக் கூறியுள்ளார்.

Similar News

News March 23, 2026

கோவையில் விசிலுக்கு தடை?

image

கோவை 26-வது வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, தூய்மைப் பணியாளர்கள் விசில் பயன்படுத்தத் தடை கோரி மனு அளித்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது, ஒரு அரசியல் கட்சியின் சின்னமான விசிலைப் பயன்படுத்துவது விதிகளுக்கு முரணானது என அவர் குறிப்பிட்டுள்ளார். விசிலுக்குப் பதில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தித் தேர்தல் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய அவர் வலியுறுத்தியுள்ளார்.

News March 23, 2026

7 வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹30,800 குறைந்தது

image

தங்கம் வாங்க நினைத்தோருக்கு இம்மாதம் ஜாக்பாட்டாக அமைந்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றத்திற்கு மத்தியிலும் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் காலை நேர வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் தற்போது 1 அவுன்ஸ் $289 குறைந்து $4,195 ஆக உள்ளது. கடந்த ஜன.29-ம் தேதி 1 சவரன் ₹1,34,400-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹30,800 சரிந்து ₹1,03,600 ஆக உள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளதாம்.

News March 23, 2026

AK 47 துப்பாக்கிகளுக்கு லோகி கனெக்‌ஷன்.. போலீஸ் ஷாக்!

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னை அசோக் நகரில் வாகன சோதனையில் 10-க்கும் மேற்பட்ட ‘AK 47’ துப்பாக்கிகளுடன் வேன் ஒன்று சிக்கியது. அதிர்ந்து போன போலீசார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில், இவை டம்மி துப்பாக்கிகள் என்பதையும், லோகேஷ் கனகராஜ் நடித்துவரும் ‘DC’ பட ஷூட்டிங்கிற்காக கொண்டு வரப்பட்டவை என்பதையும் போலீஸ் உறுதி செய்தனர். இதையடுத்து லைசன்ஸை சரிபார்த்தபின் அந்த வேனை விடுவித்தனர்.

error: Content is protected !!