News March 5, 2026
மாநிலங்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் வேட்பாளர் மனு

சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 05), மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோர் கலந்து கொணடனர். மேலும், இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News March 12, 2026
சென்னையில் ரூ.5000 வேண்டுமா?

சென்னை மக்களே.., உங்கள் வீட்டு இல்லத்தரசிகள் சுயமாக தொழில் தொடங்க உதவும் நோக்கத்தில், அரசு சார்பாக ‘கிரைண்டர் மானிய திட்டம்’ உள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு ரூ.5,000 மானியமாக வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே உரிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவியாக இருக்கும்.
News March 12, 2026
சென்னையில் நடிகை மீது நடிகர் பரபரப்பு புகார்!

பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை நடிகை மீது, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பி, தன்னை மன உளைச்சலுக்கு உண்டாக்கி, பணம் பறிக்க முயல்வதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
News March 12, 2026
ராயபுரம்: 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சென்னை, ராயபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த 7ஆம் தேதி பள்ளி முடிந்து, வீட்டுக்கு நடந்து சென்றார். ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள கடையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில், பி.வி கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (54) என்பவரை, போக்சோ சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


