News March 5, 2026
2 வாரங்களில் தவெக வேட்பாளர் பட்டியல்

2026 தேர்தலில் தனித்து களமிறங்க திட்டமிட்டுள்ள தவெக, 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிக்கு 4 வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை ஏற்கெனவே முடித்துள்ள விஜய், அவர்களிடம் விரைவில் நேர்காணல் செய்யவிருக்கிறார். அதன்பின், வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, தொகுதி வாரியாக பரப்புரை செய்ய திட்டமிட்டிருக்கிறார்.
Similar News
News March 19, 2026
திருவாரூர்: பிரச்சாரத்தை தொடங்கிய அமமுக

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் எஸ். காமராஜ் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிக்கான தனது தேர்தல் பிரச்சாரத்தை, இன்று தனது சொந்த ஊரான எடகீழையூரில் இருந்து தொடங்கினார் முன்னதாக அங்குள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் திறந்த வேனில் நின்றபடி வீதி வீதியாக சென்று வாக்குகள் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்.
News March 19, 2026
அரசியல் சர்ச்சையில் சிக்கிய ‘துரந்தர்-2’

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள ‘துரந்தர்-2’ திரைப்படம் அரசியல் சர்ச்சைகளையும் கூடவே அழைத்து வந்துள்ளது. குறிப்பாக பிரபல தாதா தாவுத் இப்ராகிம் உடன் காங்கிரஸுக்கு மறைமுக தொடர்பு, பாஜக ஆட்சியின் பண மதிப்பிழப்பு எனச் சர்ச்சையான விவகாரங்கள் காட்சிகளாக்கப்பட்டுள்ளன. இதற்கு SM-ல் ஆதரவு, எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நீங்கள் படத்தைப் பார்த்துவிட்டீர்களா? உங்கள் கமெண்ட்
News March 19, 2026
திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

வரும் தேர்தலில் இளைஞர்களை அதிகளவில் தேர்தல் களத்தில் இறக்கிவிட திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாம். அந்த வகையில் திருமயம் தொகுதியில் உதயநிதிக்கு மிக நெருக்கமான புதுக்கோட்டை மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் கைலாசத்தை போட்டியிட வைக்க திமுக திட்டமிட்டுள்ளதாம். இதனால், இந்த தொகுதியில் கடந்த இரண்டு தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் ரகுபதிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


