News May 13, 2024
ரேவண்ணாவுக்கு ஜாமின்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதசார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் கடத்தப்பட்ட புகாரில், மே 4ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக மாநில சிறப்பு நீதிமன்றம், ரேவண்ணாவுக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
Similar News
News November 19, 2025
இந்தியாவின் ‘Most Wanted கேங்ஸ்டர்’ பிடிபட்டார்!

இந்தியாவின் Most Wanted குற்றவாளியான அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று டெல்லி வந்தடைந்தார். பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர் மீது, சித்து மூஸ் வாலா கொலை, சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட 18 வழக்குகள் உள்ளன. அன்மோலை கைது செய்த NIA குழு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளது.
News November 19, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி.. முடிவு இதுதான்!

கூட்டணி தொடர்பாக விஜய் அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. திமுக அணியில் இருந்து விலக காங்., தயங்குவதால், மீண்டும் அதிமுகவை விஜய் பரிசீலிக்கிறாராம். அப்படி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டால் கணிசமான இடங்கள் வெல்வதுடன், கரூர் வழக்கையும் சமாளித்துவிடலாம் என நம்புகிறாராம். விரைவில் நேரடியாக 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறலாம் எனவும் கூறப்படுகிறது.
News November 19, 2025
நடிகராகும் தமிழக அரசியல் பிரபலம்

தயாள் பத்மநாபன் இயக்கிவரும் ‘லஷ்மிகாந்தன் கொலை வழக்கு’ படத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் நடிகராக இணைந்துள்ளார். பாஜகவின் H.ராஜாவும் கதாநாயகனாக ’கந்தன் மலை’ என்னும் படத்தில் நடித்துள்ளார். நாதக தலைவர் சீமானும் ‘LIK’ படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார். அரசியல் தலைவர்களின் சினிமா என்ட்ரி பற்றி உங்கள் கருத்து என்ன?


