News May 13, 2024
ஈரோடு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 10 மணி வரை ஈரோடு மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 13, 2026
சத்தி அருகே விபத்து: மாணவன் பலி

சத்தி, திப்பு சுல்தான் ரோட்டை சேர்ந்த கெளதம் (15), தனியார் பள்ளி மாணவன் பைக்கில் தனது நண்பர்களை பார்த்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது எதிரே கோபிநாத் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேனும் பைக்கும் சத்தியமங்கலம் – பண்ணாரி ரோட்டில் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 13, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் வழக்கமான கால இடைவெளியில் தடையின்றி வழங்கப்படும் என எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. எனவே, பொதுமக்கள் அச்சமடைந்து இணையவழியில் அவசர முன்பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். பதிவு செய்த வரிசைப்படி சிலிண்டர்கள் முறையாக விநியோகிக்கப்படும் என ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
News March 13, 2026
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098


