News March 5, 2026
திமுக கூட்டணி.. ஒரே இரவில் மொத்தமாக மாறியது

திமுகவா, தவெகவா என இரட்டை நிலைப்பாட்டுடன் இருந்ததாக கூறப்பட்ட காங்., இறுதியாக நேற்று இரவு திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்தது. இந்நிலையில், இதுவரை 21 கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்துள்ளது. இதனால் 2026 தேர்தலில் வெற்றி நிச்சயம் என்பதையே <<19299599>>‘Over’ என்ற சைகையில்<<>> ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார் என திமுகவினர் கூறி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News April 6, 2026
மனைவியை கொன்று சடலத்துடன் படுத்த கணவன்

மனைவியை கொன்று அவரது சடலத்துடன் 2 நாள்கள் கணவன் தூங்கிய சம்பவம் ம.பி.,யை அதிர வைத்துள்ளது. மனைவி ரிமா பாய் வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி கணவன் ஜெகதீஷ் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார். மனைவி உடலை ஒரு அறையில் வைத்துவிட்டு, என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகளுடன் அதே அறையில் 2 நாள்கள் ஜெகதீஷ் தூங்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் கொடூர கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News April 6, 2026
புருவங்கள் அடர்த்தியா வளர அருமையான TIPS

முகத்திற்கு அழகு சேர்ப்பதே புருவங்கள் தான். இவை அழகாக தெரிய, அதன் அடர்த்தி அதிகரிக்க இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். ஆமணக்கு எண்ணெயை தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதில் இருக்கும் புரதம், கொழுப்பு புருவங்களின் முடி வளர்ச்சிக்கு உதவும். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News April 6, 2026
IPL : பஞ்சாப் பவுலிங்

PBKS-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற KKR பேட்டிங் தேர்வு செய்துள்ளது. விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியை தழுவிய KKR, முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது. அதேநேரத்தில், ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து பாயிண்ட்ஸ் டேபிளில் முதலிடத்துக்கு நகரும் வியூகத்துடன் PBKS களம்காணுகிறது. போட்டியில் 90% மழை பாதிப்பு ஏற்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


