News May 13, 2024
தென்காசி மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை தென்காசி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 7, 2025
தென்காசியில் கிராம உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள 18 கிராம உதவியாளர் (தலையாரி) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் ஊதியமாக ரூ.11,100 – ரூ.35,100 வரை வழங்கப்படும். விண்ணப்பதாரர் 21 வயது நிறைவு செய்து அந்த வட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் https://www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT
News July 7, 2025
பாவூர்சத்திரத்தில் பெண்கள் உட்பட 150 பேர் கைது

பாவூர்சத்திரம் கீழப்பாவூர் விலக்கு, காமராஜர் தினசரி சந்தை ஆகிய இரண்டு இடங்களில் மனமகிழ் மன்றங்களை திறப்பதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை கண்டித்து நேற்று காமராஜர் சிலை முன்பு நேற்று ஏராளமானோர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
News July 7, 2025
தென்காசி மாவட்டம் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

தென்காசி மாவட்டம் எஸ்.பி அவர்களின் உத்தரவின் பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். இன்று (ஜூலை 6) தென்காசி உட்கோட்ட பகுதியில் உள்ள ஊர்களான ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில், புளியங்குடி போன்ற பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு இரவு நேரம் காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. அல்லது 100ஐ தொடர்பு கொள்ளலாம்.