News May 13, 2024
விருதுநகரில் பெண் சடலமாக மீட்பு

தென்காசியை சேர்ந்தவர் ராஜம்மாள்(56). கணவர் 14 ஆண்டுகளுக்கு முன் இறந்த நிலையில் குழந்தை இல்லாததால் விருதுநகர் அருகே பாண்டியன் நகர் பகுதியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் ராஜம்மாள் வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஊரக போலீசார் ராஜம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News April 20, 2025
விருதுநகர்: திரைப்படங்கள் காண ஆட்சியர் அழைப்பு

விருதுநகர் மாவட்ட பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க விருதுநகர், ஸ்ரீவி,ராஜபாளையம், சிவகாசி, அருப்புக்கோட்டை, காரியாபட்டியில் ஏப்.25 முதல் மே.01 வரை சிறந்த திரைப்படங்கள் திரையிடும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களும் கலந்து கொள்ளலாம். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் 8608204154 என்ற எண்ணில் அழைக்கலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 20, 2025
விருதுநகர்: அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. விருதுநகர் மாவட்டத்தில் 72 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். இதற்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி. <
News April 19, 2025
விருதுநகரில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான தங்களது குறைகளை மனுக்கள் மூலம் நேரடியாக தெரிவித்து பயனடையலாம் என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.