News May 13, 2024
பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்த உரிமையாளர் மரணம்

கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் அருகே பட்டாசு ஆலை நடத்தி வந்த ராஜேந்திரன் வயது 56 கடந்த 9ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்தார். கௌரி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் காயம் அடைந்தனர். உடல் முழுவதும் 80 சதவிகித தீக்காயத்துடன் ராஜேந்திரன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Similar News
News November 5, 2025
விழுப்புரம்: கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

விழுப்புரம் மாவட்ட மக்களே.., உங்களுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் கீழ் வருமாறு:
1) கிராம ஊராட்சி செயலாளர் வேலை
2) லோக்கல் வங்கி அலுவலர் வேலை
3) NABFINS வங்கியில் வேலை
4) Data Entry Operator வேலை
5)ரயில்வே துறையில் வேலை
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 5, 2025
விக்கிரவாண்டியில் மொபைல் போன்கள் பறிமுதல்!

விக்கிரவாண்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போன மொபைல் போன்கள் குறித்து புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்து 11 மொபைல் போன்களை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். நேற்று(நவ.4) விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் டி.எஸ்.பி., சரவணன் மொபைல் போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் சத்தியசீலன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
News November 5, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


