News March 4, 2026

குமரி: சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

image

குமரி மக்களே, <>இங்கு க்ளிக் செய்து<<>> 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் பதிவு செய்தால் View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். SHARE பண்ணுங்க…

Similar News

News March 7, 2026

குமரி: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

குமரி மாவட்ட மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

News March 7, 2026

குமரி: வீட்டின் முன் மர்மமாக இறந்து கிடந்த பெண்!

image

சூழால் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (53). இவர் வீட்டின் முன்பு முகத்தில் காயத்துடன் அசைவற்ற நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

News March 7, 2026

குமரியில் மேலும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்!

image

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

error: Content is protected !!