News May 13, 2024
ரேசன் கடைகளுக்கு விற்பனை முனைய இயந்திரங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில
643 நியாயவிலைக் கடைகளுக்கு 4 ஜி இணையதள வசதியுடன் குடும்ப அட்டைதாரரின் கைவிரல்ரேகை பதிவு செய்யும் வசதியுடன் அல்லது கண் கருவிழியினை ஸ்கேன் செய்வதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் பெறும் புதிய வசதியுடன் கூடிய
விற்பனை முனைய இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
பழனி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த கருப்புசாமி (33). இவர், குடும்ப பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் யாரும் இல்லாதபோது கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த ஆயக்குடி போலீசார் கருப்புசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி GH-க்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிகின்றனர்.
News March 5, 2026
சிசிடிவி கேமிரா பொருத்த காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் குற்றத் தடுப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. “காவல்துறையின் மூன்றாம் கண் – சிசிடிவி கேமிரா பொருத்துவோம், பாதுகாப்பாக இருப்போம்” என்ற வாசகத்துடன் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் நிறுவனங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 4, 2026
திண்டுக்கல்லில் இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (மார்.04) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


