News March 4, 2026
தஞ்சை: கல்விச் செலவை அரசே ஏற்கும் – விஜய்

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் இன்று (மார்ச் 04) தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விஜய் பேசுகையில், 2 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான கல்விச் செலவை அரசு முழுமையாக ஏற்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
தஞ்சை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

தஞ்சை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 7, 2026
தஞ்சையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பிரதமர் மோடி பங்கேற்கும் திருச்சி பொதுக்கூட்டத்திற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 06) தஞ்சையில் நடைபெற்றது. மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளுக்குப் பணிகளைத் துரிதப்படுத்துவது குறித்த வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
News March 7, 2026
தஞ்சாவூர்: 34 பேரிடம் ரூ.1.50 கோடி மோசடி!

தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதிகளில், சமூக வலைதளங்கள் மூலம் ஆன்லைன் டிரேடிங் மற்றும் பகுதிநேர வேலை என ஆசை காட்டி 34 பேரிடம் சுமார் ரூ.1.50 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் ஆசிரியர்கள், விவசாயிகள், தனியார் ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரை அடுத்து, தஞ்சாவூர் சைபர் க்ரைம் காவல்துறையினர் 34 வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


