News May 13, 2024
பாகிஸ்தானுக்கு வளையல்களை அனுப்புவோம்

பாகிஸ்தானுக்கு வளையல்களை தமது அரசு அனுப்பி வைக்கும் என்று மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், INDIA கூட்டணி கட்சியினர் பாகிஸ்தானை கண்டும், அந்நாட்டின் அணுஆயுதங்களை கண்டும் அஞ்சுவதாகவும், அக்கட்சிகள் கோழைகள் என்றும் கூறினார். தமது அரசு பாகிஸ்தானுக்கு வளையல்களை அணிவிக்கும், பாகிஸ்தானிடம் போதிய வளையல்கள் இல்லையெனில் தயாரித்து அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.
Similar News
News March 25, 2026
நெல்லையில் போட்டியிட விரும்பும் கனிமொழி?

திமுகவின் டெல்லி முகமாக இருக்கும் கனிமொழி, தமிழக அரசியலில் நுழைய விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் தேர்தலில் திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 17 தொகுதிகளில் கனிமொழிக்கு ஆதரவாக திமுகவினர் சிலர் விருப்ப மனு அளித்தனர். ஆனால், அவர் நேர்காணலில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நேர்காணலில் பங்கேற்கவில்லை என்றாலும், தலைமை கூறினால் நெல்லையில் போட்டியிட கனிமொழி விரும்புவதாக கூறப்படுகிறது.
News March 25, 2026
ஏசி விலை ₹6,000 வரை உயர்கிறது

ஏசி விலைகள் 8% முதல் 12% வரை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 1.5 டன் ஏசி தற்போது ₹50,000 எனில், இனி ₹50,400 – ₹56,000 வரை விற்பனை செய்யப்படும். ஜனவரி முதல் அமலுக்கு வந்த புதிய BEE ஆற்றல் மதிப்பீட்டு விதிமுறைகள், உற்பத்திச் செலவை அதிகரித்துள்ளன. இது தவிர, சர்வதேச சந்தையில் தாமிரம் மற்றும் அலுமினியம் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வு நிறுவனங்களின் மீதான சுமையை அதிகரித்துள்ளன.
News March 25, 2026
அணு ஆயுதம்.. என் முடிவே சரி: கிம் ஜாங் உன்

ஈரான் மீதான USA தாக்குதல், வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பது சரிதான் என்பதை நிரூபிக்கிறது என கிம் ஜாங் உன் கூறியுள்ளார். 2019-ல் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தையை குறிப்பிட்ட அவர், USA-ன் அழுத்தத்தையும், இனிமையான பேச்சையும் நிராகரித்தது சரியே எனவும் பேசியுள்ளார். மேலும், அணு ஆயுத பலம் இல்லாத நாடுகள் USA-க்கு இலக்காக மாறும் என்ற அவருடைய நம்பிக்கை உறுதியாகியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.


