News March 4, 2026

திமுக மாவட்ட செயலாளர் நிர்வாகிகளிடம் ஆலோசனை

image

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட – சுகுணாபுரம் பகுதிகழகம் – இடையர்பாளையத்தில் அமைந்துள்ள அஹ்லே சுன்னத் ஜமாத் தக்னி மஸ்ஜித் & கபர்ஸ்தான் மஸ்ஜித் ஜமாத்தில் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தேவைகளை கேட்டறிந்து, கோவை வடக்கு திமுக மாவட்ட செயலாளர் தொ.ரவி நிதியுதவி வழங்கினார். உடன் சுகுணாபுரம் பகுதி செயலாளர் சிவசக்தி, மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Similar News

News March 14, 2026

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

image

சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் போதிய ரயில்கள் நின்று செல்லாததால் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், நள்ளிரவில் மர்ம நபர்கள் ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் இருந்த ‘சிங்காநல்லூர்’ என்ற இந்தி எழுத்துக்களைக் கருப்பு மை கொண்டு அழித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 14, 2026

கோவை – பெங்களூரு வந்தேபாரத் ரயில் நேரத்தில் மாற்றம்

image

கோவை – பெங்களூரு வந்தேபாரத் ரயில் (20642) (மார்ச்.15) முதல் ஒசூர் நிலையத்திற்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும் என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வழக்கமாக மதியம் 12:05 மணிக்கு ஒசூர் வரும் இந்த ரயில், இனி 12:15 மணிக்கு சென்றடையும். காலை 7:25-க்குப் புறப்படும் இந்த ரயில், தருமபுரி வழியாக மதியம் 1:45-க்கு பெங்களூரு சென்றடைவதில் மாற்றமில்லை.

News March 14, 2026

கோவையில் பரிசு பொருள்கள் வழங்கும் திமுக!

image

கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி, திமுக சார்பில், செல்வபுரம் பகுதியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மேற்கு மண்டல திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ரவி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்தார்.

error: Content is protected !!