News March 4, 2026
சிவகங்கை: OPS அணி அமைச்சர் தலைமையில் திமுகவில் ஐக்கியம்.!

சிவகங்கை திமுக மாவட்ட செயலாளரும், கூட்டுறவுதுறை அமைச்சருமான கே.ஆர் பெரியகருப்பன் முன்னிலையில், நேற்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்தவர்கள் திமுகவில் இணைந்தனர். அமைச்சர் பெரியகருப்பன் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார். உடன் சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கை மாறன் ஆகியோர் இருந்தனர்.
Similar News
News March 11, 2026
சிவகங்கை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

சிவகங்கை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க.
News March 11, 2026
மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், சிவகங்கை மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலாவதி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 12.03.2026 அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர் /பகிர்மானம் / மானாமதுரை கோட்டத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News March 11, 2026
BREAKING மானாமதுரை: ஆகாஷ் மரணத்தில் அதிர்ச்சி தகவல்.!

மானாமதுரை ஆகாஷ் உயிரிழந்த விவகாரத்தில், நீதித்துறை நடுவர் ரிமாண்ட் அறிக்கையில் இரும்பு கம்பியால் காலை உடைத்தது போலீஸ் தான் என்றும், கீழே விழுந்து உடைந்ததாக பொய் சொல்ல சொன்னதாக ஆகாஷ் வாக்குமூலம் அளித்ததாக மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகார் உண்மை எனில் வழக்கின் பிரிவுகள் மாற்றப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். SC, ST பிரிவில் வழக்கு பதிய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்.


