News March 4, 2026
சேலத்தில் திமுக-வில் கூண்டோடு இணைந்தனர்

அதிமுக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழகத்தில் பெரும் பேசும் பொருளான நிலையில், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சேலம் மாநகர மாவட்ட ஓபிஎஸ் அணி செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
Similar News
News March 11, 2026
மத்திய அமைச்சரிடம் மனு

டெல்லியில் இன்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் புரியை, திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி (ம) சேலம் எம்பி டி.எம்.செல்வகணபதி ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது, தமிழ்நாட்டிற்கு தேவையான இயற்கை எரிவாயு வழங்கலை உறுதி செய்யவும், தட்டுப்பாடின்றி சிலிண்டர் வழங்கவும் வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அமைச்சரிடம் வழங்கி விரிவாகக் கோரிக்கை விடுத்தனர்.
News March 11, 2026
சேலத்தில் அடிதடி தகராறு: 17 பேர் மீது வழக்கு

சேலம் கல்பகனூரில் திருவிழா விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் அவரது நண்பர்கள் வசூலில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த நிதீஷ் குமார் தரப்பினருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது மோதலாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி, இரு தரப்பையும் சேர்ந்த 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
News March 11, 2026
சேலம்: எம்எல்ஏ அருள் அதிரடி எச்சரிக்கை!

சேலம் ஓமலூர் கோட்டக்கவுண்டம்பட்டியில் இன்று திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூடக் கோரி பாமக எம்.எல்.ஏ அருள் வலியுறுத்தியுள்ளார். வரும் மார்ச் 12-ம் தேதிக்குள் கடை மூடப்படாவிட்டால், அன்றைய தினம் காலை 11 மணிக்குத் தாமே நேரில் வந்து கடையைப் பூட்டிப் போராட்டம் நடத்தப்போவதாக அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோட்டக்கவுண்டம்பட்டி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


