News March 4, 2026
கிருஷ்ணகிரியில் தட்டி தூக்கிய பாஜக!

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தெற்கு மண்டல தலைவர் மூர்த்தி தலைமையில் நேற்று 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைந்தனர். ஆதிதொட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாற்று கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இந்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
Similar News
News March 5, 2026
கிருஷ்ணகிரி: மாணவிக்கு HM பாலியல் தொல்லை!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் சுதாகரன். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பகுதியில் அரசு பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அஞ்செட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் சீண்டல் செய்ததாக நேற்று முன்தினம் போலீசில் பெற்றோர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
News March 5, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் இரவு நேர ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச்.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News March 4, 2026
கிருஷ்ணகிரியில் ஒரு குட்டி இங்கிலாந்து

ஓசூரில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ளது தளி. தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உள்ள தளி முற்றிலும் பல்வேறு மலை வாசஸ்தலங்களால் சூழப்பட்டுள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை நினைவூட்டும் ஒரு சிறந்த வெப்பநிலையைக் கொண்டுள்ளது. எனவே இது பிரிட்டிஷ் அரசாங்கத்தின் போது “லிட்டில் இங்கிலாந்து” என்று அழைக்கப்பட்டது. ஷேர் பண்ணுங்க மக்களே!


