News March 4, 2026

பெரம்பலூர் ஊர் காவல் படைக்கு 19 பேர் தேர்வு

image

பெரம்பலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கான பயிற்சிகள் முடிவடைந்ததை முன்னிட்டு நேற்று பயிற்சி நிறைவு விழா மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட எஸ்.பி அனிதா தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஊர்க்காவல் படைக்கு 16 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 19 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 6, 2026

பெரம்பலூர்: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

பெரம்பலூர் மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

பெரம்பலூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்!

image

குன்னம் தொகுதி, செந்துறை மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த 20-கும் மேற்பட்ட மாற்றுக் கட்சியினர், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரின் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் திமுக செந்துறை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் பொன்.செல்வம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 6, 2026

பெரம்பலூர்: போலி அறக்கட்டளை நடத்திய 3 பேர் கைது

image

பெரம்பலூர் மாவட்டத்தில் “VAO (Vigilance Awareness Organizations)” என்ற பெயரில் போலியான அறக்கட்டளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்த செல்லம் (55), தேவக்குமார் (55), பார்த்தசாரதி (35) ஆகிய மூன்று நபர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!