News May 13, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

JUST IN குமரி: காதலனுடன் சேர்ந்து தாயை கொல்ல முயன்ற மகள்

image

பிள்ளையார்புரம் பகுதியை சேர்ந்தவர் கலாவதி. இவரது மகள் சுருதி கல்லூரியில் தன்னுடன் படிக்கும் அபிலாஷ் என்பவருடன் பழகியுள்ளார். இந்நிலையில் சுருதி வீட்டில் இருந்த நகையை அபிலாசுக்கு கொடுத்துள்ளார். நகையை கேட்டு மகளிடம் கலாவதி சண்டையிட்டதால் இருவரும் சேர்ந்து கலாவதியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சி செய்தனர். இதுகுறித்து கலாவதி அளித்த புகாரில் 2 பேரையும் சுசீந்திரம் போலீசார் கைது செய்தனர்.

News March 14, 2026

குமரி: கேஸ் குறித்து கலெக்டர் புகார் எண் அறிவிப்பு

image

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் சமையல் எரிவாயு விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் ஆட்சியர் கூறியதாவது; குமரி மாவட்டத்தில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. இதுதொடர்பான புகார்களை 1077 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். மருத்துவமனை, குழந்தைகள் (ம) பெண்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு சிலிண்டர் அனுப்புவதில் எவ்வித இடையூறும் இருக்கக் கூடாது என்றார்.

News March 14, 2026

குமரி: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

image

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, ​SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..

error: Content is protected !!