News May 13, 2024
திருச்சி மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருச்சி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2026
திருச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கு – நீதிமன்றம் அதிரடி

துறையூர், ஜம்புநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (32) என்பவர் முட்புதருக்குள் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவ்வழக்கில் பெருமாள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி பெருமாளுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பளித்தார்.
News March 4, 2026
திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

திருச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பரசம்பேட்டை, சத்திரம் பேருந்து நிலையம், வானப்பட்டறை, முருங்கப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், சோழ ராஜபுரம், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், குளவாய்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!
News March 4, 2026
திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


