News May 13, 2024
திண்டுக்கல் மாவட்டத்தில் மழை

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து ஆதரவற்றோர் முதியோர் மாற்றுத்திறனாளிகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அவ்வாறு ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இவ்வில்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திண்டுக்கல்லில் தொழில் முன்னோடிகள் திட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் பயனடைய https://www.msmetamilnadu.tn.gov.in/aabcs என்ற இணைய முகவரியை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம். மாவட்ட தொழில் மையத்தை 8925533943 தொலைபேசி வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News July 9, 2025
திண்டுக்கல்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகை

திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளோர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரில் வந்து விண்ணப்ப படிவத்தினை பெற்றுக்கொள்ளலாம். மேலும், https://tnvelaivaaippu.gov.in (அ) www.Invelaivaaippu.gov.in இணையதளத்தில் படிவத்தினை பதிவிறக்கம் செய்யலாம்.