News March 3, 2026
விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News March 28, 2026
சாம்பியன் RCB-க்கு டஃப் கொடுக்குமா ஆரஞ்சு ஆர்மி!

நடப்பு சாம்பியன் RCB- SRH இன்று மோதுகின்றன. SRH-ல் இஷான், ஹெட், அபிஷேக், கிளாசென் ஆகியோர் பெரிய ஸ்கோரை விளாச உதவுவார்கள். கம்மின்ஸ் இல்லாமல் பவுலிங் மட்டும் கொஞ்சம் தடுமாறுகிறது. RCB-ல் கோலி, ஜிதேஷ், படிதர், சால்ட், வெங்கடேஷ் ஐயர் போன்றோர் சிறப்பான பார்மில் உள்ளார்கள். RCB-ன் பவுலிங்கும் வலுவாகவே உள்ளது. இந்நிலையில், பெங்களூரில் 284 ரன்களை விளாசி மிரட்டிய SRH, மீண்டும் மேஜிக்கை நிகழ்த்துமா?
News March 28, 2026
போரில் இணைந்த குழு.. இஸ்ரேல் மீது முதல் தாக்குதல்

ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதன் மூலம் போரில் அதிகாரப்பூர்வமாக ஹூதி குழு இணைந்துள்ளது. ஈரான் ஹூதிகளுக்கு நவீன ஆயுதங்கள், நிதி & ராணுவப் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்த ஆதரவு ஏமனில் ஹூதிகளின் செல்வாக்கைத் தக்கவைக்க உதவுகிறது. இதனால் ஈரானுக்கு ஆதரவாக ஹூதி போரில் இறங்கியுள்ளது. ஆனால், ஹூதியின் தாக்குதலை இடைமறித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
News March 28, 2026
அடுத்தடுத்து விலகினர்.. இபிஎஸ் அதிர்ச்சி

அதிமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் அடுத்தடுத்து அவர்களின் கட்சியிலிருந்து விலகுவது EPS-க்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம். சோளிங்கர் தொகுதியை பாமகவுக்கு கொடுத்ததால் ராணிப்பேட்டை அமமுக மா.செ., பார்த்திபன் அக்கட்சியிலிருந்து விலகினார். தொடர்ந்து, கட்சியின் வளர்ச்சிக்கு தலைமை தகுந்த செயல்பாடுகளை மேற்கொள்ளவில்லை எனக் கூறி காஞ்சி மாவட்ட தமாகா தலைவர் வி.புருஷோத்தமான் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


