News March 3, 2026
திருவள்ளூர் கலெக்டரிடம் 633 மனுக்கள்!

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 2) நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் நிலம் சம்பந்தமாக 181, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை சம்பந்தமாக 76, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 109, வேலைவாய்ப்பு வேண்டி 32, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 25, இதர துறைகள் சார்பாக 210 என மொத்தம் 633 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News March 16, 2026
திருவள்ளூர்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
News March 16, 2026
திருவள்ளூர்: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

▶️ திருவள்ளூர் மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். ▶️ இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். ▶️ அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். *இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க*
News March 16, 2026
திருவள்ளூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தேர்தல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண் 1800 425 8515 மற்றும் வாட்சப் எண் 7305158550 ஆகியவற்றில் புகார் அளிக்கலாம் எனவும், புகார்களை கண்காணிக்க ஒரு தொகுதிக்கு மூன்று பறக்கும் படையினர், மூன்று நிலை கண்காணிப்பு குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலர், கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


