News March 3, 2026

செங்கை: சிலிண்டர் மானியம் வருதா? போனில் பார்க்கலாம்

image

கூகுளில் <>mylpg <<>>என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் செய்யுங்கள்.

Similar News

News March 11, 2026

செங்கை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News March 11, 2026

செங்கை: அதிமுக எம்.பி மாநிலங்களவையில் கோரிக்கை!

image

கல்பாக்கம் அணுசக்தி நிலையத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தனபால் நேற்று கோரிக்கை வைத்துள்ளார். நீண்ட காலமாக பணியாற்றியும் நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கப்படாத நிலை குறித்து அவர் கவலை தெரிவித்தார். அதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News March 11, 2026

செங்கல்பட்டில் சிறுவன் துடிதுடித்து பலி!

image

வண்டலூர்: கேளம்பாக்கம் அருகே சிறுசேரி பகுதியில், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி கட்டிட வேலைகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சிறுசேரி பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அடாடத் சிக்டன் (17) வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி அடாடத் சிக்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!