News March 3, 2026

புதுகை மாவட்ட கலெக்டர் அதிரடி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் 34 பேர், பல்வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன் தொடர்பாக எவ்வித விடுப்பு விண்ணப்போமோ, மறுக்கடிதமோ மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவித்துள்ளார்.

Similar News

News March 6, 2026

புதுக்கோட்டை: 190 பெண்கள் உட்பட 390 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பழைய பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட 180 பெண்கள் உட்பட 390 பேரை போலீசார் கைது செய்தனர்.

News March 6, 2026

புதுக்கோட்டை: ஆட்சியர் அறிவிப்பு!

image

புதுக்கோட்டை ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அரசு மற்று தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தொழிற்பழகுனர் பயிற்சிக்கான முகாம் வரும் 9ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த நிறுவனங்கள் பங்கேற்று, தேர்வு செய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.05) இரவு 10 முதல் இன்று (மார்ச்.06) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!