News May 13, 2024
பிரதமர் மோடி தயங்குவது ஏன்?

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமருடனான விவாதத்திற்கு ராகுல் காந்தி தயார் என கூறினார். ஆனால், பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வராத நிலையில், பிரதமர் தயங்குவது ஏன் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமருக்கு துணிவில்லாததால், விவாதத்திற்கு வரவில்லை என்ற அவர், மடியில் கனமிருப்பதாலேயே அவர் தயங்குகிறார் என சாடியுள்ளார்.
Similar News
News March 20, 2026
ஆரணியில் தொடர்ந்து லட்சக்கணக்கில் பறிமுதல்

( மார்ச் 20) ஆரணி அருகே விண்ணமங்கலம் மற்றும் பல்லாந்தாங்கல் பகுதிகளில் பறக்கும் படையினர் நடத்திய வாகனச் சோதனையில், உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.3 லட்சம் மற்றும் ரூ.1.07 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்டவர் இருசக்கர வாகனத்தில் பணம் கொண்டு வந்ததாக தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரூ.4.07 லட்சம் தேர்தல் உதவி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
News March 20, 2026
ஈரான் போர்: மத்திய அரசை புகழ்ந்த காங்., MP சசி தரூர்!

ஈரான் போர் விவகாரத்தில் இந்தியாவின் மெளனம் கோழைத்தனம் அல்ல; சிறப்பான ராஜதந்திரம் எனக் காங்கிரஸ் MP சசிதரூர் புகழ்ந்து பேசியுள்ளார். அதேபோல், மத்திய அரசு, விவேகத்துடனும், எச்சரிக்கையுடனும் சிறப்பாக செயல்படுவதாக மற்றொரு MP மணீஷ் திவாரியும் பாராட்டியுள்ளார். ஈரான் விவகாரத்தில் PM மோடி கோழைத்தனமாக செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி விமர்சித்து வரும் நிலையில், அவரது கட்சி MP-க்கள் அரசை புகழ்ந்துள்ளனர்.
News March 20, 2026
உலக தடகள வரலாற்றில் கால்பதிக்கும் இந்தியா

2028 உலக உள்ளரங்க தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை முதல்முறையாக இந்தியா பெற்றுள்ளது. இதற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு, ஒடிசாவின் புவனேஸ்வர் தேர்வானது. இதன்மூலம் ஜப்பான், கத்தார் & சீனாவை அடுத்து இப்போட்டியை நடத்தும் ஆசியாவின் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக உள்ளரங்க தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை.


