News May 13, 2024
10 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கே.வி.குப்பம் சந்தைமேட்டில் இன்று (மே 13) ஆட்டு சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு ஆடு 20 ஆயிரம் வரை விலை போனது. மேலும் இன்று ஒரே நாளில் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News August 22, 2025
வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.
News August 22, 2025
வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

வேலூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 22 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள். 1. வேலூர் மாநகராட்சி, ஆனை குளத்தம்மன் கோயில் சமுதாயக்கூடம் கொசப்பேட்டை 2. காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ரேணுகாம்பாள் மஹால் வஞ்சூர் 3.அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரதலம்பட்டு என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 22, 2025
வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஆகஸ்ட் 22 காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.