News March 2, 2026
விஜய் பட தயாரிப்பாளருக்கு வந்த அடுத்த சோதனை!

ஜனநாயகனை அடுத்து யஷின் ’டாக்ஸிக்’ படத்தை தயாரித்துள்ளது KVN நிறுவனம். அப்படம் ரீலிசாகும் மார்ச் 19-ம் தேதி அன்று ’துரந்தர் 2’-ம் ரிலீசாகிறது. டாஸ்ஸிக் ரன்னிங் டைம் 3.25 மணி நேரமாகவும், துரந்தர் 2 ரன்னிங் டைம் 3.40 மணி நேரமாகவும் இருப்பதால் எந்த தியேட்டரிலும் கூடுதல் காட்சிகள் திரையிட முடியாத நிலை. இதனால் தியேட்டர் ஓனர்கள் படத்தின் ரன்னிங் டைமை குறைக்க கோரி KVN-க்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
Similar News
News April 2, 2026
BREAKING: ரத்து செய்தார் பிரதமர் மோடி

சென்னையில் நடைபெறவிருந்த பாஜக உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டத்தை PM மோடி ரத்து செய்துள்ளார். கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் 150 நிர்வாகிகளுடன் இந்த சந்திப்பானது நாளை மறுதினம் நடைபெறவிருந்தது. வேட்பாளர்கள் தேர்வில் ஏற்படும் தாமதம் காரணமாக PM மோடி இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. தேர்தல் பரப்புரைக்காக PM மோடி நாளை சென்னை வழியாக புதுச்சேரி செல்ல உள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
இது மத உரிமையை சிதைக்கும் முயற்சி: கனிமொழி

சிறுபான்மையின தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியை முடக்கும் நோக்கத்தோடு <<19536429>>வெளிநாட்டு நிதி பங்களிப்பு (ஒழுங்குமுறை) <<>>மசோதாவை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் அரசியலமைப்பு வழங்கியுள்ள அனைத்து மதங்களுக்கும் சம உரிமையை சிதைக்கும் எந்தவொரு முயற்சியையும் திமுக கூட்டணி அனுமதிக்காது. மத்திய பாஜக அரசு உடனடியாக இம்மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News April 2, 2026
AC-யை 16 டிகிரியில் வைக்கிறீங்களா… உஷார்!

கோடைக்காலம் வந்தாலே AC-யை 16 டிகிரியில் வைத்து ஜில்லென்று இருக்கவே பலரும் விரும்புவார்கள். ஆனால் திடீரென இவ்வளவு சில்னெஸுக்கு மாறுவது தொண்டை வறட்சி, தோல் வறட்சி, மூச்சுத் திணறல், தசைவலி & தூக்கமின்மை போன்ற உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதற்கு பதில் AC-யை 24 – 26 டிகிரியில் பராமரிப்பதே உடல்நலத்துக்கு ஏற்றதாம். இதனால் மின்கட்டணமும் மிச்சமாகும்.


