News March 2, 2026
தஞ்சை: +2 பொதுத்தேர்வை 333 மாணவர்கள் எழுதவில்லை

தஞ்சாவூர் மாவட்டதில் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு 111 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 105 அரசு பள்ளிகள், 40 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 84 தனியார் பள்ளிகள் என 229 பள்ளிகளில் பயிலும் 12,755 மாணவர்கள், 14,099 மாணவிகள் உட்பட மொத்தம் 26,854 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்நிலையில் 333 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 6, 2026
தஞ்சை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

தஞ்சை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News March 6, 2026
தஞ்சை: பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

தஞ்சையில் பாஜக மாநில செயலாளர் தலைமையில், பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை தருவதை முன்னிட்டு, பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கான திட்டமிடல்கள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் விரிவாக விவாதித்தனர்.
News March 6, 2026
தஞ்சை: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது!

பொந்திரிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (25). இவர் மீது கஞ்சா வழக்கு உள்ளது. இவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என எஸ்.பி ராஜாராம் பரிந்துரையின்பேரில் வழக்கு ஆவணங்களை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பரிசீலனை செய்து, சூர்யாவை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அவர் குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


