News May 13, 2024
ஹேமந்த் சோரனுக்கு பெயில் தர மறுப்பு

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் பெற்ற நிலையில் அதே காரணங்களுக்காக தனக்கும் ஜாமின் வழங்க வேண்டும் என்று சோரன் மனு அளித்திருந்தார். ஆனால், உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துவிட்டது. முன்னதாக, தேர்தல் பிரசாரத்திற்காக கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
Similar News
News March 25, 2026
காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை: EPS

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக காவலர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்குவது கவனம் ஈர்த்துள்ளது. ஏற்கெனவே 2021-ல் இதற்காக அரசாணை பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ள நிலையில் இதனை தற்போது தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார். ஆனால், இந்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை. 2025-ல் HC இந்த உத்தரவை தலைமைக்காவலர் வரை முழுமையாக அமல்படுத்த உத்தரவிட்டது.
News March 25, 2026
கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்

➤மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். ➤கறுப்பு நிறம் வெப்பத்தை ஈர்க்கும் தன்மை கொண்டதால் கறுப்பு நிற ஆடைகளை தவிர்ப்பது நல்லது. ➤ உச்சி வெயில் நேரங்களில் வெளியே செல்ல நேர்ந்தால் குடை பிடித்து செல்லலாம். ➤அடிக்கடி முகம் கழுவுவது சிறந்தது. ➤வியர்வை அதிகமாக வெளியேறும் என்பதால் 2 முறை குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.
News March 25, 2026
ஒதுக்கப்படாமல் கிடக்கும் 20 ஆயிரம் வீடுகள்

தமிழகத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சலுகை விலையில் 20,000 வீடுகள் விற்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொடர்ந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு இதுவரை வீடுகள் ஒதுக்கப்படவில்லை என்று மக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், தேர்தல் முடிந்த பின் வீடுகள் ஒதுக்கீடு பணிகள் தொடரும் என்று துறை அதிகரிகள் தெரிவித்துள்ளனர்.


