News May 13, 2024
சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் 93.60% பேர் தேர்ச்சி

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளன. இதில் 20 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 93.60% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.48% அதிகமாகும். சென்னை மண்டலத்தைப் பொறுத்தமட்டில், 99.30% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகபட்சமாக திருவனந்தபுரம் மண்டலத்தில் 99.75% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
Similar News
News March 11, 2026
மக்கள் பீதியடைய வேண்டாம்: ஷோபா கரண்ட்லஜே

போரினால் நம் நாட்டில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என மத்திய அமைச்சர் ஷோபா கரண்ட்லஜே கூறியுள்ளார். இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 80-90% மத்திய கிழக்கு நாடுகளை சார்ந்துள்ளது; இந்நிலையில் கர்நாடகா உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் ஹோட்டல்களை பாதிக்கும் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 11, 2026
நாடு முழுவதும் லாக்டவுன் பதற்றம்.. அடுத்த ஷாக்!

2020 மார்ச் மாதத்தை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 25.3.2020 – 14.4.2020 வரை முதற்கட்ட லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. தற்போது சிலிண்டர் பிரச்னை மறைமுகமாக லாக்டவுனை நோக்கி நகர்த்தி வருவதாக இணையத்தில் பலரும் பதிவிட்டு வருவதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால், சிலிண்டர் வாங்க பலரும் குவிகின்றனர். ஆனால், பிரச்னை விரைவில் தீரும் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
News March 11, 2026
திருச்சி வரும் PM மோடி.. முக்கிய திட்டங்கள் என்னென்ன?

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை PM மோடி தொடங்கி வைக்கிறார். நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.


