News March 2, 2026
அரியலூர்: தூக்கி வீசப்பட்டு காதலர்கள் பலி

இடுக்கி மாவட்டம் கேரளாவை சேர்ந்த ஆதித்யா மற்றும் மருங்கலா குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சங்கர் மகள் சரண்யா இருவரும், காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு ஆமணக்கு தோண்டி பஸ் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி, மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
Similar News
News March 10, 2026
அரியலூர்: அரசு வேலை – நாளை கடைசி வாய்ப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) காலியாக உள்ள 2551 செவிலியர் அதிகாரி (Nursing Officer) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2551
3. சம்பளம்: ரூ.9,300- ரூ.34,800
4. கல்வித் தகுதி: B.Sc Nursing, DGNM
5. வயது வரம்பு: 18-30 (SC/ ST-35, OBC-33)
6. கடைசி தேதி: 11.03.2026
7.விண்ணப்பிக்க: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க
News March 10, 2026
அரியலூர்: ஒரே அழைப்பில் ஓடி வரும் லைன்மேன்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் அரியலூர் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார்.
News March 10, 2026
அரியலூர் விவசாயிகளுக்காகக் குளிர்பதன கிடங்கு!

அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை விளைப் பொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலம் அதிநவீன குளிர்பதன கிடங்கு அரியலூர், ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்தில் உள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


