News May 13, 2024
ரயிலில் ஏறும்போது தவறி விழுந்த மாணவன்

எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஹம்மது நபில். 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற இவர் இன்று காலை ஆவடியில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பம் வாங்க எண்ணூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது ரயிலில் ஏற முயன்ற ஹம்மது நபில் எதிர்பாராதவிதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்து தலையில் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 19, 2025
திருவள்ளூர்: வீடு கட்டப்போறீங்களா? இது அவசியம்!

திருவள்ளூர் மக்களே.., வீடு கட்ட ஆகும் செலவை விட வீடு வாங்கும் கட்டட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க தான் அதிக செலவாகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 19, 2025
திருவள்ளூர்: விமானப் படையில் 340 காலியிடங்கள்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய விமானப் படையில் ‘Flying Branch , Ground Duty’ பிரிவுகளில் உள்ள 340 காலியிடங்களை நிரப்ப தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க டிச.14ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விண்ணப்பிக்க ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.56,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 19, 2025
திருவள்ளூர்: தொடர்ந்து இரண்டு கோயில்களில் கொள்ளை

திருவள்ளூர்: செஞ்சி பனப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள முருகன் மட்டும் அம்மன் ஆலயங்களில் பூட்டை உடைத்து நேற்று(நவ.17) இரவு அம்மன் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் உண்டியலை உடைத்து திருட்டுச் சம்பவம் அரங்கேரி உள்ளது இந்த திருட்டு சம்பவம் குறித்து பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர் இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


