News March 2, 2026
OPS நீங்கள் இப்படி செய்யலாமா? புகழேந்தி

மூன்று முறை CM ஆக இருந்த OPS திமுகவில் இணைந்து பெரிய தப்பு செய்துவிட்டார் என அவரது ஆதரவாளராக இருந்த புகழேந்தி விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், OPS அண்ணா.. எத்தனை முறை அண்ணா என்று அழைத்திருப்பேன்… யாரு வேண்டுமானாலும் போயிருந்திருக்கட்டும்.. ஆனால் நீங்கள் போயிருக்கலாமா என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். தன்னை நம்பி இருந்தவர்களை OPS நடு ஆற்றில் விட்டுவிட்டார் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News March 23, 2026
அரக்கோணம் அருகே பயங்கர விபத்து!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த தணிகைப்போளூர் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார்(19), கும்பினி பேட்டையைச் சேர்ந்தவர்கள் பிட்டன்ராஜ்(19), பொதின் வளவன்(16). 3 பேரும் நேற்று முன் தினம் இரவு ஒரே ஸ்கூட்டரில் கும்பினிபேட்டையில் இருந்து அரக்கோணத்தை நோக்கி வந்தனர். தணிகைப் போளுரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே தடுப்புச் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது. இதில், 3 பேரும் படுகாயமடைந்தனர்.
News March 23, 2026
மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் ➤மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் தடவினால் குணமாகும் ➤கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது ➤மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.
News March 23, 2026
FLASH: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா!

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நெட்டப்பாக்கம்(தனி) – சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – லாவண்யா, இந்திரா நகர் – ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ராமதாஸ் தரப்பு 10 தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


