News March 1, 2026

புதுக்கோட்டை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000!

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 2, 2026

வைரிவயல்: இறந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வைரவயல் பகுதியில் இருந்து அறந்தாங்கி பகுதிக்கு செல்லக்கூடிய சாலையின் ஓரத்தில் இன்று (மார்ச்.2) அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு இறந்தவர் யார்?, எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 2, 2026

புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே க்ளிக்<<>> செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News March 2, 2026

புதுகை: சாலையை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

image

புதுக்கோட்டை மாவட்டம் சாங்கிராப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பொண்ணு(60). இவர் சாங்கிராப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடக்கும் போது,அவ்வழியாக பைக்கில் வந்த கார்த்திகேயன் அவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தில், சின்னப்பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!