News May 13, 2024
ராம்நாட்டில் விபத்து: 2 வாலிபர்கள் பலி

பெருங்குளத்தைச் சேர்ந்தவர் கதீஷ் குமார், (24). இவரது நண்பர் காளீஸ்வரன் (20). இவர்கள் 2 பேரும் நதிப்பாலம் – உச்சிப்புளிக்கு நேற்று மாலை டூவீலரில் வந்தனர். பெருங்குளம் அங்கன்வாடி மையம் அருகே வந்தபோது ராமேஸ்வரம் – ராம்நாடு சென்ற கார் மோதியதில் 2 பேரும் இறந்தனர். இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இருவரும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.
Similar News
News September 13, 2025
ராமநாதபுரம்: ரேஷன் கார்டு இருக்கா? இதை பண்ணுங்க!

ராமநாதபுரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News September 13, 2025
பரமக்குடியில் ரூ.185 லட்சத்தில் புதிய அம்சம்..விரைவில்

பரமக்குடி கமுதக்குடியில் செயல்பட்டு வரும் நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் 750 மெட்ரிக் டன் அளவு கொண்ட குடோன் ரூ.185 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. இதனை இன்று மாவட்டக் கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் அடிக்கல் நாட்டினர் உடன் ஒன்றிய கழகச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி இளைஞரணி அமைப்பாளர் துரைமுருகன் உட்பட பலர். இருந்தனர்.
News September 13, 2025
ராநாதபுரம்: கரையில் கிடந்த ஆடை குளத்தில் துடிதுடித்து போன உயிர்

பரமக்குடி எமனேஸ்வரம் காந்தி நகரை சேர்ந்தவர் கதிரேசன் 42. விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று மதியம் அருகிலுள்ள உய்ய வந்த அம்மன் பகுதி நகராட்சி குளத்தில் குளிக்க சென்றார்.அப்போது மயங்கிய நிலையில் நீரில் மூழ்கி பலியானார். உடலை கைபற்றி பிரதே பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் விசாரிக்கின்றனர்.