News May 13, 2024
மீண்டும் வருகிறது ராஜ்டூட் பைக்

1970களில் இந்திய சாலைகளில் வலம் வந்த ‘ராஜ்டூட்’ பைக்குகள் மீண்டும் சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த பைக்கை பழைய டிசைனில் நவீன வசதிகளுடன் சந்தைப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. 125CC இஞ்சினுடன் சுமார் 1 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பைக் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
Similar News
News March 4, 2026
ராசி பலன்கள் (04.03.2026)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News March 4, 2026
ஈரான் பேச்சுவார்த்தைக்கு ரெடி… NO சொல்லும் டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் 4-வது நாளாக தொடர்கிறது. ஈரானும் பதிலுக்கு வளைகுடா நாடுகளில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனிடையே ஈரானின் விமானப்படை, கடற்படை மற்றும் தலைமை அழிக்கப்பட்டுவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்போது அவர்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கான நேரம் கடந்துவிட்டதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
News March 4, 2026
சாதிய விஷம் விதைப்பவர்களை கைது செய்க: மாரி செல்வராஜ்

நாங்குநேரியில் சாமானிய மக்கள் மீது சமூகவிரோதிகள் சிலர் நிகழ்த்தியுள்ள<<19286535>> கொலைவெறி தாக்குதல்<<>> பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். வெறும் போதை திமிரில் தொடர்ந்து தென்மாவட்டங்களில் சாதிய பெருமிதங்களை விஷமாக விதைத்து வரும் சமூக விரோதிகளை அடையாளம் கண்டு சிறைபடுத்தவும், வன்முறையற்ற சமூக பிளவுகளற்ற TN-க்கான நம்பிக்கையை உருவாக்குமாறும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


