News March 1, 2026
விடைபெறத் தயாராகுங்கள்: அதிமுக

எந்த Getup போட்டுட்டு வந்தாலும், உங்களுக்கு இனி Get out தான் என ஸ்டாலினின் போட்டோவை சித்தரித்து அதிமுக விமர்சித்துள்ளது. வேஷங்கள் கலையும் நேரம் வந்துவிட்டது. இனி எந்த வேடம் போட்டும் எந்த பயனும் இல்லை, உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை, உங்கள் வீழ்ச்சிக்கான தொடக்கவுரையை எழுத மக்கள் தயாராகி விட்டார்கள். உங்கள் அலங்கார அரசியலின் முகத்திரை கிழியும் நேரம் இது, விடைபெறத் தயாராகுங்கள் எனவும் சாடியுள்ளது.
Similar News
News March 1, 2026
சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை: அன்புமணி

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சாசன அங்கீகாரத்தை கொடுத்தவர் PM மோடி என அன்புமணி தெரிவித்துள்ளார். NDA பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பாஜக ஆளும் பிஹாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதற்கேற்ப நலத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கு சம்பந்தம் இல்லை என்றும், சமூகநீதி என்றாலே PM மோடிதான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
News March 1, 2026
3 ராசிகளுக்கு எச்சரிக்கை

சூரியன் மற்றும் சனி சேர்க்கையால் இம்மாதம் யுதி திருஷ்டி யோகம் உண்டாக இருப்பதால் 3 ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம். அதன்படி, *மேஷம்: காதல் வாழ்க்கையில் சிக்கல் வரும். திருமணமாகாதவர்களுக்கு துணை கிடைப்பது கடினமாக இருக்கும். *துலாம்: நிதி இழப்புகள் ஏற்படலாம். சொத்து வாங்கும் (அ) விற்கும் முடிவுகள் தவறாக முடியலாம். *கும்பம்: உறவினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும். கவனமாக இருங்கள்.
News March 1, 2026
மருக்களை ஒரே வாரத்தில் உதிர வைக்கும் வீட்டு வைத்தியம்

உடம்பு (அ) முகத்தில் இருக்கும் மருக்கள் உங்கள் அழகை குறைக்கிறதா? கவலையை விடுங்க. பூண்டை வைத்தே இந்த மருக்களை அகற்றலாம் என சித்தா டாக்டர்கள் சொல்கின்றனர். இதற்கு, ஒரு பூண்டு பல் நசுக்கி, மருக்கள் மீது தடவி, அதனை பஞ்சை வைத்து மூடுங்கள். இதை தினமும் செய்து வந்தால், மருக்கள் கருப்பாகி 7 – 10 நாள்களுக்குள் உதிர்ந்து போகும் என்கின்றனர். இந்த வீட்டு வைத்தியத்தை அனைவரும் தெரிந்துகொள்ள SHARE பண்ணுங்க.


