News March 1, 2026
திருநெல்வேலி: பெண் உட்பட 4 பேர் குண்டாஸில் கைது

நெல்லை மாவட்டம், தாழையூத்து திருக்குறுங்குடி, மானூர் மற்றும் வீரவநல்லூர் பகுதியில் கஞ்சா விற்ற வழக்கில் பேராட்சி செல்வி, சண்முகசுந்தரம், மாரிமுத்து, கோயில்ராஜை போலீசார் கைது செய்தனர். நெல்லை எஸ்பி பிரசன்ன குமார் பரிந்துரையின் பேரில் கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் போலீசார் நேற்று 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். பேராட்சி செல்வி மதுரை பெண்கள் தனி சிறையில் அடைக்கப்பட்டார்.
Similar News
News March 2, 2026
நெல்லை: ரயிலில் தவறி விழுந்தவர் பரிதாப பலி

குமரியை சேர்ந்த டார்லிங் ஜோஷ் (37) கடந்த 23ம் தேதி சென்னை – குமரி ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த ரயில் நெல்லை சந்திப்புக்கு வந்தபோது அவருடைய பை மட்டும் இருந்துள்ளது. உடனே அவரை தேடிய ரயில்வே போலீசார் அவர் மயங்கிய நிலையில் தூத்துக்குடி மணியாச்சி ரயில்பாதை அருகே கிடந்ததை கண்டு அவரை மீட்டு நெல்லை G.H-க்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
News March 2, 2026
நெல்லை இரவு காவல் பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று மார்ச் 1ம் தேதி இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீஸ் சரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது. அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.
News March 1, 2026
நெல்லை : பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <


